Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியின் 13-வது ஆண்டு விழா 'அசுரா 26' கோலாகலம்: பள்ளி முகவரி மற்றும் தொடர்பு எண்களுடன் முழு விவரம்!

0

 ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியின் 13-வது ஆண்டு விழா 'அசுரா 26' கோலாகலம்: பள்ளி முகவரி மற்றும் தொடர்பு எண்களுடன் முழு விவரம்!



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலையில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா (Diamond Vidyalaya) பள்ளியின் 13-வது ஆண்டு விழா, "அசுரா 26" (ASURA 26) என்ற தலைப்பில் பள்ளி மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.


பள்ளியின் தாளாளர் டைமன் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தேனி மாவட்ட பள்ளி கல்வித்துறை கண்காணிப்பாளர் பாலமுருகன்,தொழிலதிபர் மதன்குமார் சீனிவாசன்,திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் சேர்மன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் கல்வி ,ஒழுக்கம்,விளையாட்டுகளில் சிறந்த முறையில் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சிறப்புரையாற்றினார்கள்



இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை இயக்குனர் கபில் ,பள்ளி கல்வி இயக்குனர்டாக்டர் வாகினி,பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த ஆண்டு விழாவில் மழலை குழந்தைகள் முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் வரை பல்வேறு பாடல்களுக்கு அழகான முறையில் நடனம் ஆடி அசத்தினார்கள் இந்த நடனங்கள் அனைத்தையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது.மாணவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் தனித்தனியாகவும் குழுவாகவும் பேச்சு போட்டிகளிலும்,பல்வேறு சரித்திர நாடகங்களையும் நடித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது


மேலும் இந்த ஆண்டு விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்



மேலும் இந்த பள்ளியினை பற்றி விவரமாகவும் அட்மிஷன் குறித்தும் தொடர்பு கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்

தொலைபேசி எண்

+91 8754663336

+ 91 98658 11112

பள்ளி மின்னஞ்சல் அனுப்புங்கள்:

dymanvidyalayaschool@gmail.com

admission@dymanvidyalaya.com

principal@dymanvidyalaya.com

தமிழ்நாடு

A - 8 - 233, ரயில்வே ஃபீடர்
சாலை, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்.

மேலும் இணையதள முகவரி

https://dymanvidhyalaya.com/


🎓 கல்வி: "தேனியில் உயர்கல்வி இலக்கியா? 🏆 சிறந்த கல்லூரிகள் மற்றும் உதவித்தொகை விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்! 📝"


💼 வேலைவாய்ப்பு: "வேலை தேடுகிறீர்களா? 🤝 தேனி மாவட்டத்தின் அனைத்து தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை ஒரே இடத்தில் பெறுங்கள்! 👔🚀"


🏢 தொழில்: "தொழில் முனைவோரா? 💰 அரசு மானியத்துடன் தொழில் தொடங்கும் https://www.google.com/search?q=TheniGuide.com! 📈💡"


🆓 விளம்பரம்: "உங்கள் கடை தேனியில் உள்ளதா? 🏪 https://www.google.com/search?q=TheniGuide.com-ல் இலவசமாகப் பதிவு செய்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துங்கள்! 📢✨"


TheniGuide.com


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.