சிறுதானிய இட்லி, தோசை மாவு தயாரிப்பு நேரடி பயிற்சி 2026: பெரியகுளத்தில் அரிய வாய்ப்பு!
" EDII பெரியகுளம் நடத்தும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி மூலம் இட்லி, தோசை மாவு தயாரிப்பதற்கான ஒரு நாள் நேரடி பயிற்சி. கட்டணம், முன்பதிவு விவரங்கள் உள்ளே. "
சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அல்லது உணவு தயாரிப்பு துறையில் புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது EDII - பெரியகுளம் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்.
தற்போதைய ஆரோக்கியமான உணவு முறைகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளால் செய்யப்படும் உணவுகளுக்கு சந்தையில் நல்ல தேவை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு,
"சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசிகளிலிருந்து இட்லி மற்றும் தோசை மாவு தயாரித்தல்"
குறித்த ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி குறித்த நாள் மற்றும் நேரம் விபரம்
நாள்: 27 மே 2026 (புதன்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை
இடம்: தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்
இந்த ஒரு நாள் பயிற்சியில், மாவு தயாரிப்பு முதல் அதனை விற்பனை செய்வது வரையிலான அனைத்து நுணுக்கங்களும் விரிவாகக் கற்றுத்தரப்படும்
"Millet Idli Dosa Batter Making Training Periyakulam 2026"
பயிற்சின் பயன்கள
அடிப்படை முறைகள்:
அடிப்படை முறைகள்: இட்லி மற்றும் தோசை மாவு தயாரிப்பின் அடிப்படை தொழில்நுட்பங்கள்.
தேர்வு முறைகள்:
தேர்வு முறைகள்:
தரமான அரிசி, உளுந்து ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சரியான அளவில் ஊறவைக்கும் முறைகள் பற்றி கற்பிக்கப்படுகிறது
அரைக்கும் தொழில்நுட்பம்:
அரைக்கும் தொழில்நுட்பம்: வெட் கிரைண்டர் மற்றும் வணிகரீதியான இயந்திரங்களைச் (இயந்திரம்) சரியான முறையில் கையாளுதல் பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது
நொதித்தல் (Fermentation):
நொதித்தல் (Fermentation): மாவின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதற்கான சரியான நொதித்தல் முறைகள் பற்றி கற்பிக்கப்படுகிறது
சிறுதானிய மாவு தயாரிப்பு:
சிறுதானிய மாவு தயாரிப்பு: கம்பு, ராகி, தினை, சாமை மற்றும் வரகு ஆகிய ஆரோக்கியமான சிறுதானியங்களைக் கொண்டு மாவு தயாரிக்கும் பிரத்யேக முறைகள் பற்றி கற்பிக்கப்படுகிறது
தரக்கட்டுப்பாடு:
தரக்கட்டுப்பாடு: சுகாதாரமான உற்பத்தி முறைகள் மற்றும் FSSAI உரிம அடிப்படைத் தகவல்கள் இந்த பயிற்சியில் தெரிவித்து பயிற்சி அளிக்கப்படுகிறது
பிராண்டிங்:
பிராண்டிங்:
தயாரித்த மாவை எப்படி பேக்கிங் (பேக்கிங்) செய்வது மற்றும் உங்கள் பிராண்டை (பிராண்டிங்) எப்படி உருவாக்குவது? என்பதனைப் பற்றி தெளிவாக கற்பிக்கப்படுகிறது
வணிக வாய்ப்புகள்:
வணிக வாய்ப்புகள்: சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்குறித்து கூறப்படுகிறது
பொருளாதாரம்:
பொருளாதாரம்: தொழில் தொடங்குவதற்கான செலவு மற்றும் லாபக் கணக்குகள் (செலவு & லாப பகுப்பாய்வு) மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கான ஆலோசனைகள்வழங்கப்படுகிறது
சிறப்பு தகவல்கள்
நீங்களே நேரடியாகச் செய்து பார்க்கும் முழுமையான செயல்முறைப் பயிற்சிஅளிக்கப்படுகிறது
நேரடி விளக்கம்:
நேரடி விளக்கம்: வல்லுநர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் செய்முறை விளக்கம் வழங்கப்படுகிறது
சான்றிதழ்:
சான்றிதழ்: பயிற்சி முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
யார் யார் பங்கு பெறலாம்
இந்தத் தொழில்முனைவோர் பயிற்சி அனைவருக்கும் பொதுவானது.
குறிப்பாக
புதியதாக சுயதொழில் / பிசினஸ் தொடங்க விரும்பும் நபர்களும்
உணவு தயாரிப்பு மற்றும் கேட்டரிங் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்
சுயஉதவிக் குழுக்கள் உறுப்பினர்கள்(SHG உறுப்பினர்கள்).
இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள்என அனைவருக்கும் அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது
பயிற்சி கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்கள்
பயிற்சி கட்டணம்
பயிற்சி கட்டணம்: ₹1,500/- மட்டும்.
முக்கிய அறிவிப்பு:
இப்பயிற்சியில் தரமான கற்றலை உறுதிப்படுத்த 25 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயமாகும்.
முன்பதிவு செய்யும் வழிமுறை:
கீழே உள்ள அதிகாரப்பூர்வ கூகுள் ஃபார்ம் லிங்க் மூலம் உங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்:
இங்கே கிளிக் செய்து முன்பதிவு செய்யவும் (பதிவு இணைப்பு)
இங்கே கிளிக் செய்து முன்பதிவு செய்யவும் (Registration Link)
கூடுதல் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
63791 40583 = 63858 01802

