⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தேனி உட்பட பல மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்! முழு பட்டியல்!

வெள்ளி, 29 மே, 2026

தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தேனி உட்பட பல மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்! முழு பட்டியல்!



"தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவின்படி தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியர்களின் முழு விவரப் பட்டியல் இதோ!


தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி மற்றும் அரசுப் பணிகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஒரே நேரத்தில் பல மாவட்ட ஆட்சியர்கள் (District Collectors) மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதில் தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆர். வைத்தினாதன், IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

தேனி மாவட்ட புதிய கலெக்டர் நியமனம்

​தேனி மாவட்ட கலெக்டராக இருந்த திரு. ரஞ்சித் சிங், IAS அவர்கள் மாற்றப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் (TNUIFSL) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராகப் பணியாற்றிய டாக்டர் ஆர். வைத்தினாதன், IAS தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழகத்தின் பிற மாவட்ட புதிய கலெக்டர்கள் பட்டியல் (District Collectors Transfer List)

​தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு:

மாவட்டம் (District) புதிய மாவட்ட ஆட்சியர் (New Collector) முந்தைய பொறுப்பு / மாற்றப்பட்டவர்
தேனி டாக்டர் ஆர். வைத்தினாதன், IAS செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்
மதுரை திரு. பி. ஆகாஷ், IAS நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர்
திருச்சி திரு. பிரதிக் தயாள், IAS நிதித்துறை இணைச் செயலாளர்
தருமபுரி திரு. வி. சரவணன், IAS திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர்
கன்னியாகுமரி திரு. எம். பிரதாப், IAS திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
நாகப்பட்டினம் திரு. கே.ஜே. பிரவீன் குமார், IAS மதுரை மாவட்ட கலெக்டர்
திருவண்ணாமலை திருமதி வந்தனா கார்க், IAS விடுப்பில் இருந்து திரும்பியவர்
கள்ளக்குறிச்சி திருமதி ஜே.இ. பத்மஜா, IAS விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)
இராணிப்பேட்டை திருமதி என். பிரியா, IAS நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர்
நாமக்கல் திரு. எல். மதுபாலன், IAS திருச்சி மாநகராட்சி ஆணையர்
திருநெல்வேலி திரு. ஆனந்த் மோகன், IAS தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர்
வேலூர் திருமதி பி.எஸ். லீலா அலெக்ஸ், IAS சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர்
தஞ்சாவூர் திருமதி ஆர். ரேவதி, IAS உயர்கல்வித்துறை துணைச் செயலாளர்
செங்கல்பட்டு டாக்டர் எம். வீரப்பன், IAS கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர்



பிற முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் (Highlights)

​மாவட்ட கலெக்டர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு முக்கிய அரசுத் துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

திரு. பி. பொன்னையா, IAS - கல்லூரி கல்வி இயக்குநராக நியமனம்.

டாக்டர் டி.ஜி. வினய், IAS - இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம்.

திருமதி ஈ. சுந்தரவள்ளி, IAS - பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளராக நியமனம்

திருமதி ஆர். லலிதா, IAS - நிதித்துறைச் செயலாளர் (செலவினம்) ஆக நியமனம்

அரசின் இந்த அதிரடி மாற்ற உத்தரவு, நிர்வாக ரீதியிலான பணிகளை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

தேனி மாவட்டத்தை பற்றிய தகவல்கள் அரசு வேலை வாய்ப்பு பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி செய்திகள் விவசாயிகளுக்கு தேவையான மானிய திட்டங்கள் பொதுமக்களுக்கு தேவையான அரசு நலத்திட்டங்கள் தொடர்ந்து நீங்கள் உடனுக்குடன்பார்த்திட

எங்கள் whatsapp குரூப்பில் இணைய