தேனி மாவட்ட மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2026: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
"தேனி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Co-Ordinator) தற்காலிகப் பணிக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்"
தேனி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Co-Ordinator) பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக ஊக்கத்தொகை அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன
முக்கிய விவரங்கள் (Job Overview):
பணியின் பெயர்: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Co-Ordinator).
பணி வகை:
முற்றிலும் தற்காலிகமானது (ஊக்கத்தொகை அடிப்படையில்).
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.05.2026 (மாலை 5.30 மணிக்குள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: பெண்கள் (குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் ஆண்கள்).
கல்வி மற்றும் இதர தகுதிகள் (Eligibility Criteria):
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு (12th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மலைப்பகுதிகளுக்கான சிறப்புச் சலுகை: மலைப்பகுதிகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்
வயது வரம்பு & சுய உதவிக்குழு நிபந்தனை:
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 35 வயதுக்குட்பட்ட பெண் சுய உதவிக்குழு (SHG) உறுப்பினராக இருக்க வேண்டும்.
சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
இருப்பிடம் மற்றும் வேலை நிபந்தனை
தேர்வு செய்யப்படும் நபர் வேறு எந்தவொரு சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனிநபர் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராகவோ இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரர் தாங்கள் விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட வட்டாரத்தில் (Block) குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும்.
மலைவாழ் மக்களுக்கான சிறப்பு விதி:
மலைப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடியிருப்புகளில் தகுதியான பெண் உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில், தகுதியுடைய ஆண் உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 29.05.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
திட்ட இயக்குநர் / இணை இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
தேனி ஒருங்கிணைந்த அலுவலக வளாகம்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (தரைத்தளம்),தேனி
குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதற்கான நேரடித் தேர்வு (Interview) மேலே குறிப்பிட்டுள்ள மகளிர் திட்ட அலுவலக வளாகத்திலேயே நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு:
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர், தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வேலைநாட்களில் (மாலை 6.00 மணிக்குள்) நேரில் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.



