​DEE ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை 2026-27 வெளியீடு!
Type Here to Get Search Results !

​DEE ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை 2026-27 வெளியீடு!

0

 ​DEE ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை 2026-27 வெளியீடு!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை 2026 தொடக்கக் கல்வி இயக்ககம்


சென்னை: தமிழகத்தில் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026-27ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் இணைந்து வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டு ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு முற்றிலும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக மட்டுமே ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✨ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் சேனல்!

கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள், தேர்வு முடிவுகள் மற்றும் கலந்தாய்வு கால அட்டவணைகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் சேனலில் இணையவும்.

👉 இங்கே கிளிக் செய்து இணையுங்கள்

கடந்த ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த "தற்போது பணிபுரியும் பள்ளியில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிநிறைவு பெற்றிருக்க வேண்டும்" என்ற நிபந்தனை இந்த ஆண்டும் விலக்கப்பட்டுள்ளது. இதனால் மாறுதல் பெற விரும்பும் அனைத்து தகுதியான ஆசிரியர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு பெற்றுள்ளனர்.


முக்கிய அறிவிப்புகள் (Important Highlights)

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 15.06.2026

விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.06.2026 (மாலை 06.00 மணி வரை)

விண்ணப்பிக்கும் முறை: ஆசிரியர்கள் தங்களுக்குரிய Individual EMIS Login ID பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்ப வகை: விருப்ப மாறுதல், பணிநிரவல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், மனமொത്ത மாறுதல் ஆகியவற்றில் தங்களுக்குப் பொருந்தும் சரியான பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.


EMIS மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் முறை

விவரங்களைச் சரிபார்த்தல்: ஆசிரியர்கள் தங்களது Individual Login-இல் உள்ள விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள் போன்றவை) சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின், பள்ளியின் Login ID-க்குச் சென்று Teacher Profile-இல் திருத்தம் செய்த பின்பே சமர்ப்பிக்க (Submit) வேண்டும்.

தலைமை ஆசிரியர் / வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதல்: விண்ணப்பத்தைப் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் (அரசுப் பள்ளி) அல்லது வட்டாரக் கல்வி அலுவலர் (BEO - ஊராட்சி ஒன்றியப் பள்ளி) பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு முதற்கட்ட ஒப்புதல் (Approval) அளிப்பார்.

நகல் சமர்ப்பித்தல்: ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை 3 நகல்கள் எடுத்து, ஒன்றை ஆசிரியரிடமும், மற்றொன்றை முதன்மை/மாவட்டக் கல்வி அலுவலரிடமும் (CEO/DEO) ஒப்படைக்க வேண்டும்.

இறுதி ஒப்புதல் (2nd Approval): உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் (CEO), தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலரும் (DEO - தொடக்கக் கல்வி) இறுதி ஒப்புதலை வழங்குவர்.

ஆசிரியர் பயிற்றுநர்கள்: BRTE & DC மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இதே நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கான ஒப்புதலைச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) வழங்குவார்.


முன்னுரிமைப் பட்டியல் (Priority Categories)

மாறுதல் கோரும் விண்ணப்பங்களில் பின்வரும் முன்னுரிமைகள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான உரிய அதிகாரியால் அளிக்கப்பட்ட ஆதாரங்களை (ஆவண நகல்) இணையத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்:

முற்றிலும் கண்பார்வையற்றவர் (100 %)

 மாற்றுத்திறனாளிகள் (40% அதற்கு மேல் ஊனம் உள்ளவர்கள் மற்றும் கண்பார்வைக் குறைபாடு உடையவர்கள்)

 மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தை உள்ள பெற்றோர்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டையாலிசிஸ் சிகிச்சை / இதய அறுவை சிகிச்சை / புற்றுநோயாளிகள் / மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள்

இராணுவத்தில் பணிபுரிபவரின் கணவன் / மனைவி

விதவை / மனைவியை இழந்தவர் / 40 வயது கடந்த முதிர்கன்னியர் / சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை

தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள்

கணவன் / மனைவி பணி முன்னுரிமை (30 கி.மீ தொலைவிற்கு மேல் - Spouse Priority)

இதர பிரிவுகள்


கணவன் – மனைவி முன்னுரிமை விதிமுறைகள்

தம்பதியினர் பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கி.மீ-க்கு மேல் இருப்பதை உறுதி செய்து, உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றினை பதிவேற்ற வேண்டும்.         கணவன் பணிபுரியும் மாவட்டம் அல்லது மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே தெரிவு செய்ய அனுமதிக்கப்படும். வேறு மாவட்டங்களை அனுமதிக்க இயலாது.


Not Willing வசதி என்றால் என்ன?

உள்மாவட்டக் கலந்தாய்வில் தங்களுக்குரிய சுழற்சி (Turn) வரும்போது, அம்மாவட்டத்தில் மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமான காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். உள்மாவட்ட கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு, இறுதியாக மீதம் உள்ள காலிப்பணியிடங்களில் (Resultant Vacancies) இவர்களுக்கு முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை (One More Choice) விருப்பத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.


வெளிமாவட்ட மாறுதல் (Inter-District Transfer)                           

மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது (பிற மாவட்டங்களை மட்டுமே தெரிவு செய்ய முடியும்).  உள்மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்து, உள்மாவட்ட கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் வெளிமாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DSE) - கலந்தாய்வு கால அட்டவணை

(கலந்தாய்வு நடைபெறும் நேரம்: முற்பகல் 09.30 முதல் பிற்பகல் 06.00 வரை)

தேதி / கிழமை கலந்தாய்வு / பணிகள் விவரம்
15.06.2026 முதல் 22.06.2026 EMIS வாயிலாகப் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்தல்
23.06.2026 முதல் 24.06.2026 பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மு.க.அ.க்கள் (CEO) ஒப்புதல் அளித்தல்
25.06.2026 விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல்
26.06.2026 & 27.06.2026 முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and Objections) செய்தல்
30.06.2026 மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் மற்றும் இறுதி காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு
01.07.2026 அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
02.07.2026 அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
03.07.2026 (வெள்ளி) அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு
04.07.2026 அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
06.07.2026 (திங்கள்) அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
07.07.2026 (செவ்வாய்) மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் உபரி பணிநிரவல் (PG Deployment - All Subjects - 01.08.2025 நிலவரப்படி)
08.07.2026 உடற்கல்வி இயக்குநர் நிலை-1 (அரசாணை எண்.78-இன் படி) உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல்
09.07.2026 முதுகலை / கணினி ஆசிரியர்கள் நிலை-1 / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
10.07.2026 (வெள்ளி) முதல் 15.07.2026 (புதன்) முதுகலை / கணினி ஆசிரியர்கள் நிலை-1 / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
16.07.2026 அரசு/நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உபரி பணிநிரவல் (BT Deployment - வருவாய் மாவட்டத்திற்குள் - 01.08.2025 நிலவரப்படி)
17.07.2026 (வெள்ளி) உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (அரசாணை எண்.78-இன் படி) உபரி பணிநிரவல் செய்தல்
18.07.2026 கலையாசிரியர்கள், இசை, தையல், இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
20.07.2026 (திங்கள்) கலையாசிரியர்கள், இசை, தையல், இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.07.2026 (செவ்வாய்) வட்டார வளமையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் BRTE & DC மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
22.07.2026 வட்டார வளமையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் BRTE & DC மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
23.07.2026 அரசு / நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
24.07.2026 (வெள்ளி) முதல் 30.07.2026 வரை அரசு / நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

தொடக்கக் கல்வி இயக்ககம் (DEE) - கலந்தாய்வு கால அட்டவணை

(கலந்தாய்வு நடைபெறும் நேரம்: முற்பகல் 09.30 முதல் பிற்பகல் 06.00 வரை)

தேதி / கிழமை கலந்தாய்வு / பணிகள் விவரம்
15.06.2026 முதல் 22.06.2026 வரை மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) ஒப்புதல் அளித்தல்
23.06.2026 முதல் 24.06.2026 வரை விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEO - தொடக்கக் கல்வி) ஒப்புதல் அளித்தல்
25.06.2026 (வியாழன் காலை 10.00 மணி) விண்ணப்பங்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்
27.06.2026 (சனிக்கிழமை) முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம், முறையீடுகள் (Claims and Objections) மற்றும் காலிப்பணியிட விவரங்கள் மாவட்ட கல்வி அலுவலரால் பதிவேற்றம் (Vacancy Upload) செய்தல்
29.06.2026 (திங்கள்கிழமை) இறுதி முன்னுரிமைப் பட்டியல் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் வெளியிடுதல் (Final Release) அத்துடன் மலைச்சுழற்சி கலந்தாய்வு மாவட்டங்களில் ஆசிரியர்களின் பெயர்களைப் பதிவேற்றம் செய்தல்
01.07.2026 (புதன்கிழமை) மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்)
02.07.2026 (வியாழன் முற்பகல்) இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)
02.07.2026 (வியாழன் பிற்பகல்) இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
03.07.2026 (வெள்ளி முற்பகல்) இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
03.07.2026 (வெள்ளி பிற்பகல்) இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
04.07.2026, 06.07.2026 & 07.07.2026 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
08.07.2026 (புதன் முற்பகல்) தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
08.07.2026 (புதன் பிற்பகல்) தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
09.07.2026 (வியாழக்கிழமை) தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
10.07.2026 (வெள்ளி முற்பகல்) பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
10.07.2026 (வெள்ளி பிற்பகல்) பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
11.07.2026, 13.07.2026 & 14.07.2026 பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
15.07.2026 (புதன் முற்பகல்) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
15.07.2026 (புதன் பிற்பகல்) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
16.07.2026 (வியாழக்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

விடுப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கட்டுப்பாடுகள்

தற்செயல் விடுப்பு: கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி (On Duty) அனுமதிக்கப்படமாட்டாது. தற்செயல் விடுப்பு (CL) எடுத்துக்கொண்டே கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.வருகைப் பதிவு: கலந்தாய்வு நாளான்று வருகை புரியாமலோ (Absent) அல்லது தாமதமாகவோ (Late) வந்தால் எக்காரணம் கொண்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.நிர்வாக மாறுதல் தடை: புகாருக்கு உள்ளாகி, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு நிருவாக மாறுதல் செய்யப்பட்டவர்கள், மீண்டும் அதே பள்ளியைக் கலந்தாய்வில் தெரிவு செய்யக் கூடாது. போக்சோ (POCSO) வழக்கு விதிகள்: போக்சோ வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு மாவட்டத்திற்கு நிருவாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த அதே மாவட்டத்தைக் கலந்தாய்வில் தெரிவு செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை. இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


திடீர் மரண விதிவிலக்கு (GO 164 சிறப்பு அரசாணை)

அரசாணை (நிலை) எண். 164 பள்ளிக் கல்வித் துறையின் திருத்தப்பட்ட விதிகளின்படி, 01.06.2025 முதல் 31.05.2026 வரையிலான காலகட்டத்தில் ஆசிரியரின் கணவரோ அல்லது மனைவியோ விபத்து மற்றும் இதர காரணங்களால் திடீரென மரணமடைந்திருந்தால், அவர்களுக்கு எந்தவித முன்னுரிமைப் பட்டியலையும் (Seniority) பின்பற்றாமல், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்திற்குச் சிறப்பு அடிப்படையில் உடனடியாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும்.


தவறான தகவல் அளித்தால் ஒழுங்கு நடவடிக்கை

மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் போலியான சான்றிதழ்களோ அல்லது தவறான விவரங்களோ இருப்பது பின்னர் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். EMIS மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List) வெளியிடப்பட்ட பிறகு, வரப்பெறும் எவ்வித முறையீடுகளும் திருத்தங்களும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை

விண்ணப்பிக்கும் முன் தங்களது EMIS Individual Login மற்றும் Teacher Profile விவரங்கள் துல்லியமாக உள்ளதா என சரிபார்க்கவும்.        உயிரியல் (Biology) பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் தங்களின் முதன்மைப் பாடத்தை (Major Subject - Zoology / Botany) மற்றும் Post Details-ஐ தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.    முன்னுரிமை கோரும் ஆசிரியர்கள் அதற்கான உரிய அலுவலரால் (Competent Authority) வழங்கப்பட்ட சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.                 கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளைத் தவறாமல் பின்பற்றி, இறுதி நாளான 22.06.2026 மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பித்து நகலை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


முடிவுரை

தமிழக ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 2026-27 முற்றிலும் வெளிப்படையான முறையில் ஆன்லைனில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கல்வித் துறையின் இந்த அதிகாரப்பூர்வ கால அட்டவணையைப் பின்பற்றி ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களை எவ்விதப் பிழையுமின்றி EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாறுதல் கோரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் வாசகர்களுக்கு எங்களது வாழ்த்துகள்!



✨ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் சேனல்!

கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள், தேர்வு முடிவுகள் மற்றும் கலந்தாய்வு கால அட்டவணைகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் சேனலில் இணையவும்.

👉 இங்கே கிளிக் செய்து இணையுங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.