⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

அரசு கல்லூரி பேராசிரியர்கள் கவனத்திற்கு: பொது இடமாறுதல் கலந்தாய்வு 2026 – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

செவ்வாய், 30 ஜூன், 2026

 அரசு கல்லூரி பேராசிரியர்கள் கவனத்திற்கு: பொது இடமாறுதல் கலந்தாய்வு 2026 – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


​சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2026-27ஆம் ஆண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வு (General Counselling) குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

​மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு கல்லூரி ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

​யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

​உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பின்வரும் அரசு கல்லூரிகளில் பணிபுரிபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்

அரசு கலைக் கல்லூரிகள் (Government Arts Colleges)

அறிவியல் கல்லூரிகள் (Science Colleges)

கல்வியியல் கல்லூரிகள் (Education Colleges)

தகுதியான பணியாளர்கள்:

​பேராசிரியர்கள் / ஆசிரியர்கள் (Teachers / Professors)

​நூலகர்கள் (Librarians)

​உடற்கல்வி இயக்குநர்கள் (Physical Education Directors)

​முக்கிய தேதிகள் (Important Dates):

விண்ணப்பம் தொடங்க நாள்: 30 ஜூன் 2026 (30.06.2026)

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 ஜூலை 2026 (07.07.2026)

அரசு கல்லூரி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு 2026 அரசாணை செய்தி வெளியீடு பக்கம் 1

உயர்கல்வித் துறை அமைச்சர் திரு பெ விஸ்வநாதன் கலந்தாய்வு அறிவிப்பு இணையதள முகவரி பக்கம் 2உயர்கல்வித் துறை அமைச்சர் திரு பெ விஸ்வநாதன் கலந்தாய்வு அறிவிப்பு இணையதள முகவரி பக்கம் 2

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை (How to Apply Online):

​கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் (DCE) கீழ் உள்ள தகுதியான பணியாளர்கள் அனைவரும் தங்களின் பணியிடமாறுதல் விண்ணப்பங்களை இணையவழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: www.dcetransfer.in

​மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, ஜூலை 7-ஆம் தேதிக்குள் பேராசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இந்த பொதுக் கலந்தாய்வில் பயன்பெறுமாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்