TNEA Engineering Rank List 2026: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! பார்ப்பது எப்படி?
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

TNEA Engineering Rank List 2026: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! பார்ப்பது எப்படி?

0

TNEA Engineering Rank List 2026: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! பார்ப்பது எப்படி? 


​தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டிற்கா 11ன இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான (B.E / B.Tech) அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலை (Rank List) உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார்.

​சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ (CBSE) பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் தாமதமானதால், இந்தத் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

TNEA 2026 தரவரிசைப் பட்டியல் முக்கிய விவரங்கள்:

மொத்த விண்ணப்பங்கள்: பொறியியல் சேர்க்கைக்கு மொத்தம் 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 2.5 லட்சம் பேர் பதிவுக் கட்டணம் செலுத்தியிருந்தனர்.

தரவரிசை பெற்றவர்கள்: தகுதிபெற்ற 1,30,767 மாணவர்கள் மற்றும் 1,05,246 மாணவிகள் என மொத்தம் 2,36,017 பேருக்கு தரவரிசை வெளியாகியிருக்கிறது.

முழு கட்-ஆஃப் (200/200): இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 53 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்:

​முதலிடம்:

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அக்‌ஷிதா பொதுப்பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாமிடம்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரோகித் பாலன்.

மூன்றாமிடம்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் வெங்கட கிருஷ்ணன்.

நான்காமிடம்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரக்‌ஷிதா.

TNEA Engineering Rank List 2026 Tamil Nadu Counselling


தரவரிசைப் பட்டியலை சரிபார்ப்பது எப்படி?

​பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் தங்களின் லாகின் விவரங்களைப் பயன்படுத்தி கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tneaonline.org

குறைதீர்ப்பு காலம் மற்றும் கலந்தாய்வு (TNEA Counselling):

​இன்று வெளியான தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் அல்லது பிழைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை வழங்கப்பட்டுள்ளது.

​மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (TFC Centres) அணுகி இதற்குரிய தீர்வுகளைக் காணலாம். மேலும், பொறியியல் சேர்க்கைக்கான விரிவான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

​தேனி மாவட்ட மாணவர்களுக்கான குறிப்பு: உங்கள் கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் ரேங்க் விவரங்களைச் சரிபார்த்து, ஆன்லைன் சாய்ஸ் ஃபில்லிங் (Choice Filling) செய்வதற்குத் தயாராக இருக்குமாறு தேனி கைடு சார்பாக வாழ்த்துகிறோம்!



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.