தேனி மாவட்ட B.Ed & TET முடித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு: KGBV பள்ளிகளில் பணி நியமனம் 2026 - ரூ.24,000 சம்பளம்!
தருமபுரி மாவட்டத்தில் சீட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் தாய்மை அன்புக் கரங்கள் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் KGBV மற்றும் NSCBAV உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்ற தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் விவரம் (Vacancy Details)
தேவைப்படும் அனைத்துப் பணியிடங்களுக்கும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (UG Degree), B.Ed. மற்றும் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1. KGBV உண்டு உறைவிடப் பள்ளி, காரிமங்கலம்
அறிவியல் ஆசிரியர்: 01 பணியிடம்
கணித ஆசிரியர்: 02 பணியிடங்கள்
2. KGBV உண்டு உறைவிடப் பள்ளி, பாப்பாரப்பட்டி
அறிவியல் ஆசிரியர்: 01 பணியிடம்
சமூக அறிவியல் ஆசிரியர்: 01 பணியிடம்
கணித ஆசிரியர்: 01 பணியிடம்
3. KGBV உண்டு உறைவிடப் பள்ளி, அமானிமல்லாபுரம்
சமூக அறிவியல் ஆசிரியர்: 01 பணியிடம்
4. KGBV உண்டு உறைவிடப் பள்ளி, பெண்ணாகரம்
தமிழ் ஆசிரியர்: 01 பணியிடம்
அறிவியல் ஆசிரியர்: 01 பணியிடம்
சமூக அறிவியல் ஆசிரியர்: 01 பணியிடம்
முக்கிய தகுதிகள் & நிபந்தனைகள் (Eligibility & Rules)
யார் விண்ணப்பிக்கலாம்?: B.Ed + TET Pass செய்த பெண் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணித்தன்மை & தங்குமிடம்: இது முற்றிலும் தற்காலிகப் பணியாகும். தேர்வாகும் ஆசிரியர்கள் பள்ளியிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும் (உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்).
மாதச் சம்பளம் (தொகுப்பூதியம்): மாதம் ரூ. 24,000/-
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் தங்களது:
புகைப்படத்துடன் கூடிய சுய விவர படிவம் (Resume/CV)
கல்விச் சான்றிதழ்கள் மற்றும் TET தேர்ச்சி சான்றிதழ் நகல்கள்
முன்அனுபவச் சான்றிதழ் (இருப்பின்)
ஆகியவற்றை இணைத்து பதிவு அஞ்சல் (Registered Post) மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
KGBV உண்டு உறைவிடப் பள்ளி
(அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம்),
காரிமங்கலம், தருமபுரி மாவட்டம் - 635111.
முக்கிய தேதிகள் & தொடர்பு எண்கள் (Important Dates)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2026 (மாலை 5.00 மணிக்குள்)
அலுவலக தொடர்பு எண்கள்:
97863 96447
97867 05157
95977 76302
88382 10490
மேலும் விபரங்களுக்கு
சரியாக விசாரித்து தொடர்பு கொள்ளவும்

