⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி செவிலியர் பணி: விடுபட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

 தேனி செவிலியர் பணி: விடுபட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!


​தேனி மாவட்ட தேசிய நல்வாழ்வுக் குழுமம் (District Health Society) சார்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற/கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

இதற்கு விண்ணப்பித்த நபர்களில், சிலரது விண்ணப்பங்களில் சான்றிதழ்கள் விடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட சுகாதார சங்கம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

​1. சமர்ப்பிக்க வேண்டிய முக்கியச் சான்றிதழ்கள்:

​விண்ணப்பத்தில் விடுபட்ட கீழ்க்கண்ட சான்றிதழ்களின் நகல் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:  

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவுச் சான்று (TN Nursing Council Registration)  

மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Sheets)  

கல்விச் சான்றுகள் (Educational Certificates)  

ஆதார் அட்டை (Aadhaar Card) 

குடும்ப அட்டை (Ration Card)  

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)  

இதர தேவையான ஆவணங்கள் / சான்றுகள்

சமர்ப்பிக்கும் இடம் மற்றும் கடைசி தேதி:

​சான்றிதழ் நகல்களைக் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்:  

​அக். 04, 2026: காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை  

அக். 05, 2026: காலை 09:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை  

முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், தேனி.  

​குறிப்பு: அக். 05 நண்பகல் 12:00 மணிக்கு மேல் பெறப்படும் சான்றிதழ்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  

Theni Guide - தேனி மாவட்ட செவிலியர் பணி விடுபட்ட சான்றிதழ் அறிவிப்பு

​3. கூடுதல் விவரங்கள் பெற:

​விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ் நகல்களின் விவரங்களை அறிய, தேனி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்:  

​அதிகாரப்பூர்வ இணைப்பு: https://theni.nic.in/notice_category/recruitment