⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

காமாட்சிபுரத்தில் எல் நினோ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வெள்ளி, 16 அக்டோபர், 2026

 காமாட்சிபுரத்தில் எல் நினோ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

காமாட்சிபுரம் உழவர் மேளாவில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் எல் நினோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேளாண் கல்லூரி மாணவர்கள்.


தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் மேளாவில், சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பாக விவசாயிகளுக்கு எல் நினோ குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள் லோகேஸ்வரன், ராஜேஷ், விஷ்வா, கௌதமன், சேகுவாரா சமயன், அசோக்குமார் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எல் நினோ தொடர்பான பல்வேறு முக்கிய பல தகவல்களை விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் திரு. வி. சிவகிருஷ்ணமூர்த்தி, I.A.S. மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. எல். ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, எல் நினோ என்றால் என்ன, அதனால் மழைப்பொழிவு, வெப்பநிலை, நீர் இருப்பு மற்றும் வேளாண் உற்பத்தியில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், செய்முறை விளக்கப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக எல் நினோவின் செயல்பாடு, அதன் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்கள் மற்றும் பயிர் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் எளிய முறையில் எடுத்துரைத்தனர்.

எல் நினோ காலத்தில் மழைப்பொழிவில் உண்டாகும் மாறுபாடுகளை எதிர்கொள்ள நீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனம், தகுந்த பயிர் திட்டமிடல், வறட்சியை தாங்கி வளரும் பயிர் ரகங்களை தேர்வு செய்தல் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாத்தல் போன்ற காலநிலைக்கு ஏற்ற நவீன வேளாண் மேலாண்மை முறைகளின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியல் நுட்பங்களை எளிய முறையில் கொண்டு சேர்ப்பதையும், காலநிலை மாற்றங்களை சமாளிக்கும் திறனை அவர்களிடம் மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.