Type Here to Get Search Results !

ஆரோக்கியமும் வருமானமும்! வெற்றிலை ஜூஸ் மூலம் சாதனை படைக்கும் தேனி பெண் ரேணுகா.vettilai-juice-business-theni-renuka

0

 ஆரோக்கியமும் வருமானமும்! வெற்றிலை ஜூஸ் மூலம் சாதனை படைக்கும் தேனி பெண் ரேணுகா.vettilai-juice-business-theni-renuka 


உலகில் அரசியல்வாதி முதல் தொழிலதிபர்கள் வரை அவர்களின் பழைய நினைவுகளை பார்த்தால் நூற்றில் 90% நபர்கள் அந்த தொழிலுக்கும் ,அரசியலுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்து வெற்றியடையவர்கள் . அந்த வகையில் ரேணுகா என்ற பெண்மணி தனது பகுதியில் விளையும் விவசாய பொருளை மனதில் வைத்து தொழில் முனைவராக சாதித்து உள்ளார்.

​"வெற்றிலை ஜூஸ் பாட்டில்களைக் கையில் வைத்திருக்கும் தேனி பெண் தொழில்முனைவோர் ரேணுகா தேவி."



உலகில் அரசியல்வாதி முதல் தொழிலதிபர்கள் வரை அவர்களின் பழைய நினைவுகளை பார்த்தால் நூற்றில் 90% நபர்கள் அந்த தொழிலுக்கும் ,அரசியலுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்து வெற்றியடையவர்கள் .

மேலும் தற்பொழுது அரசியல் முதல் தொழில் வரை எண்ணற்ற போட்டிகள் உள்ளது .இந்த போட்டிகளில் நிலைத்து நின்று வெற்றி வாய்ப்பு என்பது ஒரு சிலருக்கு கிடைக்கிறது.

தொழில் முனைவோர்களாக எண்ணற்ற நபர்கள் முயற்சிகள் எடுத்தாலும் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே வெற்றி அடைகிறது.எண்ணற்ற தொழில்கள் இருந்தாலும் தனித்தன்மையான தொழில்களை தேர்வு செய்து, அந்தத் தொழிலை வெற்றி அடைய செய்து வரும் நபர்கள் சிலரே.

​"தேனியில் ஆரோக்கியமான வெற்றிலை ஜூஸ் தயாரிப்பு மற்றும் பேக்கிங் செய்யும் காட்சி - ரேணுகாவின் வெற்றிக் கதை."

இப்படி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பகுதியை சேர்ந்த ரேணுகா என்பவர் கலை வெட்டுவது முதல் பல்வேறு தொழில்கள் செய்து லாப நஷ்டங்களை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் தனித்துவமான தொழிலை தேர்வு செய்து வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறி பல பெண்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

மேலும் அவர் கூறும் பொழுது எனக்கு சொந்த கிராமம் சுருளிபட்டி . எனது கணவருக்கு ராமநாதபுரம் சொந்த ஊராகும்.நாங்கள் திருமணம் முடிந்தவுடன் இங்கேயே வாழ்க்கையை ஆரம்பித்தோம். திருமணமான புதிதில் கூலி வேலைக்கு சென்ற நாங்கள் கூலி வேலைக்கு சென்றபோது குடும்பத்துக்கு தகுந்தாற்போல் வருமானம் வரவில்லை.

சுகாதாரமான முறையில் வெற்றிலை ஜூஸ் தயாரிக்கும் செயல்முறை - தேனி சிறுதொழில்.

மேலும் எத்தனை நாளுக்கு தான் கூலி வேலை செய்ய வேண்டும் சொந்தமாக ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்து முதலில் ஹோட்டல் திறந்து தொழிலை ஆரம்பித்தோம் சிறிது காலங்களில் ஹோட்டல் தொழில் நஷ்டம் வந்ததனால் டீக்கடை ஆரம்பித்தோம் டீக்கடையும் தங்களுக்கு போதிய வருமானத்தை தரவில்லை.

எனது கணவருக்கு இராமநாதபுரம் சொந்த ஊர் என்பதால் சுருளி ஆனைமலை உள்ளிட்ட இந்த பகுதிகளில் விளையும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி இராமநாதபுரம் பகுதியில் விற்பனை செய்யலாம் என்று ஆலோசனை செய்து மொத்த காய்கறிகளை வாங்குவதற்காக செல்லும் பொழுது எனது கணவரின் அக்கா ஜூஸ் விற்பனை செய்ததைப் பார்த்து நாங்களும் அதேபோல் ஜூஸ் விற்பனையில் இறங்கலாம் என்று முடிவு செய்தோம்.


எனது கணவரின் சகோதரி வீட்டிலேயே ஜூஸ் பாக்கெட் தயார் செய்து ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கடைகளில் விற்பனை செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் நாங்களும் ஜூஸ் பாக்கெட் விற்பனை செய்வதற்கான பொருட்களை வாங்கி தொழிலை தொடங்கினோம்.

ஆப்பிள் ஆரஞ்சு மேங்கோ திராட்சை என 4 வகையான பிளவர்களில் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று இறங்கினோம்.

முதலில் எந்த ஒரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதற்கு மக்கள் மனதில் பெயர் நன்றாக அமைய வேண்டும் என்பது விதி. அதனை கருத்தில் கொண்டு ஆப்பில் ஆரஞ்ச் மேங்கோ திராட்சை என இவற்றின் பெயர்களை வைத்து மே கோ என்ற பெயரில் ஜூஸ் பாக்கெட் தயார் செய்து விற்பனை செய்தோம்.


ஒவ்வொரு பாக்கெட் ரூ.5 என்ற அடிப்படையில் விற்பனை செய்ய வேண்டும் என்று கருத்தில் கொண்டு முதலில் பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள கடைகள் ,மளிகை கடைகள், டீக்கடைகள் என பல்வேறு கடைகளில் ஜூஸ் விற்பனையை தயாரித்து வழங்கி வந்தோம்.ஒரு பாக்கெட் ரூ.5 என்பதனை தேனி மாவட்டத்தில் எந்த பகுதியில் கோட்டாலும் ரூ.5 என்ற அடிப்படையில் விற்பனை செய்தோம்.

      கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள கே வி கே பற்றி தகவல் கிடைத்தது.அங்கு பணி புரியும் ரம்யா மேடம் நாங்கள் ஜூஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதைக் கூறியவுடன் ஜூஸ் தொழிலானது அனைவரும் செய்துவரும் பொதுவான தொழிலில் தான்.இந்தத் தொழிலை தாண்டி உங்கள் கிராமத்தில் விளையும் ஒரு பொருளில் இருந்து புது வகையான தொழிலை செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார்.

​"பசுமையான வெற்றிலைகள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட வெற்றிலை ஜூஸ் பாட்டில்கள்."

நமது பகுதியில் அதிகமாக விளையும் பொருளாக கருதப்படுவது வெற்றிலையாகும் .இந்த வெற்றிலை கொண்டு புதிய தொழிலை ஆரம்பம் செய்யலாம் என்று முடிவெடுத்து ,முதலில் வெற்றிலை ஜூஸ்.தயாரித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து வெற்றிலை வாங்கி வந்து வேற வேற மாதிரி ஜூஸ் தயார் செய்து பார்த்தோம் .ஆனால் நாங்கள் நினைத்த மாதிரி ஜூஸ் வரவில்லை பிறகு வெற்றிலை ஜூஸ் மூன்று மாதம் கழித்து தயாரித்ததில் சரியான சுவையும் மனமும் கிடைத்தது.இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு மூன்று மாதங்களாக பல்வேறு பணிகளை செய்தோம்

வெற்றிலை ஜூஸ் தயாரித்து முடித்த சமயத்தில் தமிழ்நாடு கவர்னர் காமாட்சிபுரம் கே வி கே விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகை தந்தார் அப்பொழுது நாங்கள் தயாரித்து வைத்திருந்த வெற்றிலை ஜூசை அங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றோம் அந்த நிகழ்வுக்கு வருகை புரிந்த விஐபி கள் நாங்கள் தயாரித்த வெற்றிலை ஜூஸ் மிகவும் நன்றாக உள்ளது என்று பாராட்டி கூறினார்கள் .இந்த பாராட்டானது தங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டியது.

தேனி To உலகம்: வெற்றிலை ஜூஸில் முத்திரை பதிக்கும் பெண் தொழில்முனைவோர் ரேணுகா.

முதலில் கவர்னர் நிகழ்ச்சியில் ஸ்டால் போட்ட நாங்கள் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றிலை ஜூஸ் ஸ்டால் போட்டோம் .கோயம்புத்தூரிலும் ஸ்டால் போட்டதில் அனைவரும் குடித்து ரொம்ப நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள்


வெற்றிலை ஜூஸ் ஆனது அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சுகர் உள்ளவர்களுக்கும், சுகர் சராசரியாக உள்ளவர்களுக்கும் அவர்களின் மனதை கருத்தில் கொண்டு இனிப்பு உள்ள ஜூசும் ,பிளைன் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்தோம்

முதலில் வெற்றிலை ஜூஸினை பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வந்தோம் ஒரு பாக்கெட் ரூபாய் பத்து ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்து வந்த நிலையில் வெற்றிலை ஜூஸ் வாங்கும் விற்பனையாளர்கள் மற்ற பிராண்டு உள்ள அனைத்து ஜூஸ்களும் குறைவான விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் உங்களுடைய வெற்றிலை ஜுஸ் பத்து ரூபாய் என்பது அதிகம் என்று கூறிவந்தார்கள்.

இவ்வளவு நாட்கள் இரவு பகல் என்று பாராமல் உழைப்பு வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்தோம்.பின்பு அந்த வெற்றிலை ஜூஸை தரமாக தாமதமாக தயார் செய்தாலும் சந்தைகள் விற்பனை செய்யும் பொழுது கவர்ச்சி தான் முக்கியம் என்பதனை மனதில் கருத்தில் கொண்டு வெற்றிலை ஜூஸ் பாக்கெட் தயாரிப்பது நிறுத்திவிட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்தோம் .ஒரு பாட்டில் 250 மிலி 30 ரூபாய் என்ற அடிப்படையில் பிளாஸ்டிக் பாட்டில் மூலம் விற்பனை செய்து வந்த நாங்கள் மேலும் தொழிலை விரிவுபடுத்துவதற்காக முதலில் பாக்கெட் ஜூல் தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டில் என்று இருந்த நிலையை மாற்றி கோலிசோடா மூலம் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்தோம்.இந்த கோலி சோடாவை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து விற்பனை செய்ததில் லாபம் தொடர்ச்சியாக கிடைத்தது .ஒரு கோலி சோடா ஜூஸ் தயாரிப்பதற்கு 15 ரூபாய் செலவு வருகின்ற நிலையில் 15 ரூபாய் உழைப்பு தகுந்தாற்போல் வருமானம் கிடைக்கிறது என்றும் கூறினார்.

ஐந்து லிட்டர் ஜூஸ் தயார் பண்றதுக்கு 7 மணி நேரம் என்ற அடிப்படையில் இருந்து வரும் நிலையில் தங்களின் கூலி செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் கருத்தில் கொண்டு ஒரு பாட்டில் 30 ரூபாய் என்று விற்பனை செய்து வருகிறோம்.

சராசரியாக ஒரு நாளைக்கு 70 பாட்டில்கள் உற்பத்தி செய்து வரும் நாங்கள் மாதத்திற்கு 68 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது ,அனைத்து செலவுகளும் போக 40 ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்திற்கு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.

வெற்றிலை சோடா

முதலில் சின்னமனூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்த நாங்கள் தேனி மாவட்டம் முழுவதும் விற்பனையை தொடங்கி சென்னை கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தாங்கள் தயாரித்து அனுப்பும் வெற்றிலை ஜூஸ் விற்பனை செய்து வருகிறோம் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களிலும் தங்களுடைய வெற்றிலை ஜூஸ் விற்பனை செய்து வரும் நிலையில் அனைவரும் புது மாதிரியான தொழிலை செய்வதினால் பாராட்டி வருகின்றனர் என்றும் தொழில் முனைவோராக மாறிய நம்பிக்கை நாயகி ரேணுகா தெரிவித்தார்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.