" தமிழகத்தில் அபூர்வம்: தேனியில் நாகராஜர் - நாகராணி சிலை வடிவில் அருள்பாலிக்கும் ஆலயம்! அக்னி பிரவேசத்தை முன்னிட்டு நெகிழ்ச்சியான வழிபாடு!"
"தேனி மாவட்டம் அல்லிநகரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தமிழகத்திலேயே அபூர்வமான நாகராஜர் - நாகராணி சிலை வடிவில் அருள்பாலிக்கும் சன்னதி அமைந்துள்ளது. அக்னி பிரவேசத்தை முன்னிட்டு இங்கு நடைபெற்ற சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் 16 வகையான அபிஷேகங்களின் முழு விவரம்!"
தேனியில் உள்ள அல்லி நகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில்
ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ,கன்னிகா பரமேஸ்வரி ஆகிய தெய்வங்கள் மூலவராக அமைந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்புரிந்து வருகிறார் . மேலும் இந்த திருத்தலத்தில்
சூரியன்,சந்திரன், கன்னி மூலை கணபதி, ராமர் தர்பார் , மகாலட்சுமி , பாலாஜி , ஆஞ்சநேயர்,
பாலமுருகன், துர்க்கை , சண்டிகேஸ்வரர்
சொர்ண ஆகர்ஷண பைரவர்,
நடராஜர் சிவகாமி அம்மன், சப்த கன்னிமார்கள் , நாகேஸ்வரர் , சப்த நாக கன்னிகள்ள் , அஷ்டதிக்கு பாலகர்கள்,
நவகிரகம் , அரசமரம் விநாயகர் ,ராகு கேது ,ஆகிய சன்னிதானங்களும்
,கன்னிகா பரமேஸ்வரி மூலவர் சன்னதியில்
கன்னி முலை கணபதி , ஞான சரஸ்வதி , காயத்திரி தேவி , ஸ்ரீ தன் வந்திரி பகவான், ஆகிய சன்னிதானங்களும்
நாகேஸ்வரர் - நாகேஸ்வரி அம்மனும் இந்த திருத்தலத்தில் அமைந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர்.
திருக்கோவிலின் தனி சிறப்பு
தேனிமாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் நாகராஜர் நாகராணி அம்மன் திருவுருவமானது பாம்பு வடிவில் அமைந்திருக்கும் மனித உருவத்தில் உருவாகி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்து வருவது தனி சிறப்பாக கருதப்படுகிறது
தமிழகத்தில் பெரும்பாலும் மூலவர் ஒருவர் இருந்தால் சில உற்சவர்கள் சன்னிதானங்கள் மட்டும் அமைந்திருக்கும் ஆனால் இந்த திருக்கோவிலில் விநாயகர் முதல் அம்மன் வரை அனைத்து சன்னிதானங்களும் அமைந்துள்ளதால் தினசரி சிறப்பு பூஜைகளும் ஞாயிற்றுக்கிழமை சில சன்னிதானங்களுக்கு சிறப்பு பூஜைகளும், அமாவாசை பவுர்ணமி கீர்த்திகை உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கல்விச் செல்வம் பெறுவதற்கும் ,நோய் நொடிகள் இல்லாமல் இருப்பதற்கும் ,பிள்ளைப் பேரு வேண்டும் என்று நினைப்பவர்களும் , இந்த திருக்கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்றும் பக்தர்களால் கூறப்படுகிறது
திருக்கோவில் அமைவிடம்
தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அல்லிநகரம் பேருந்து நிலையம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இந்த அல்லிநகரம் அமைந்துள்ளது .அல்லி நகரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால் வரதராஜ பெருமாள் திருக்கோவில் அருகே இந்த திருக்கோவில் அமைந்துள்ளது
அக்னி பிரவேசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
இந்நிலையில் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் , அக்னி பிரவேசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பூஜை திரவியங்கள் ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது . சிறப்பு தீபாஆதரணையை தொடர்ந்து கன்னிகா பரமேஸ்வரி நாமம் சகஸ்ர லட்சார்ச்சனை பெண்களால் நடத்தப்பட்டது,தொடர்ந்து கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது.
இந்த தீபாதாரனையின் போது அல்லிநகரம் , தேனி பொம்மைய கவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை தேனி அல்லிநகரம் ஆர்ய வைஸ்ய மகாஜன சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்த பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது









