தேனி மாவட்டத்தில் மீன்பாசி குத்தகை ஏலம் அறிவிப்பு: ஐ-டெண்டர் விண்ணப்பிப்பது எப்படி?
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆர்.வைத்தியநாதன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தேனி மாவட்டம், மஞ்சளாறு நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமையினை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கு மின்னணு முறையில் (e-tender) ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்புதல் புள்ளிகள் சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வரவேற்கப்படுகிறது.
📞 கூடுதல் விவரங்கள் மற்றும் தொடர்புக்கு:
இது குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள முகவரி மற்றும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
அலுவலக முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு கட்டிடம்,
மீன்வளத்துறை 3-வது தளம், எண்.571, அண்ணாசாலை,
நந்தனம், சென்னை - 600 035.
தொலைபேசி எண்: 044-29510407
மின்னஞ்சல் முகவரி: inlandfisheries15@gmail.com
முக்கிய குறிப்பு: ஒப்புதல் புள்ளிகளில் (டெண்டர்) மாற்றங்கள் ஏதேனும் இருப்பின், அவை மேலே குறிப்பிட்ட இணையதளம் வழியாக மட்டுமே அறிவிக்கப்படும்.
தேனி மாவட்ட அலுவலகத் தொடர்பு விவரங்கள்:
மீன்பாசி குத்தகை தொடர்பான கூடுதல் விபரங்களை நேரடியாகப் பெற விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி அணுகலாம்:
உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
வைகை அணை (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பார்க்கோடு வைகை அணை, பெரியகுளம் வட்டம், தேனி).தொலைபேசி எண்: 8778191094
தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக உரிய காலத்திற்கு விண்ணப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
