ஆண்டிபட்டி வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா 2026
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

ஆண்டிபட்டி வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா 2026

0

 ஆண்டிபட்டி வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா 2026 

வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர் ஜெயந்தி சிறப்பு அலங்காரம்


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பு அலங்கார பூஜை, சிறுவர்-சிறுமிகளின் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்த வழிபாட்டுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் கோகுலகிருஷ்ணன்:

வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா பரிசளிப்பு மற்றும் அன்னதானம்

கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ன. தொடர்ந்து, மூலவர் கோகுலகிருஷ்ணன் கண்ணைக் கவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணர் - ராதை வேடத்தில் அசத்திய குழந்தைகள்:

விழாவின் முக்கிய நிகழ்வாக, வைகை குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுக்குக் கிருஷ்ணர் வேடமும், சிறுமிகளுக்கு ராதை வேடமும் அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். சிறு குழந்தைகளின் இந்த வண்ணமயமான வேடமணிந்த வருகை விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.

பரிசுகள் மற்றும் அன்னதானம்:

கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த வைகை குரும்பபட்டி கிராமத்துச் குழந்தைகள்

விழாவில் பங்கேற்று கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அசத்திய சிறுவர், சிறுமியர்களுக்கு கிராமக் குழுவினர் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

​பூஜையின் நிறைவில், கிருஷ்ணருக்குப் பிடித்தமான நிவேதனப் பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.