Type Here to Get Search Results !

தேனி சித்தார்பட்டியில் நெகிழ்ச்சி: மந்திரங்கள் முழங்க 'தொழுவ மாடுகளுக்கு' முக்கனி மரியாதை - வைரலாகும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்!

1

 தேனி சித்தார்பட்டியில் நெகிழ்ச்சி: மந்திரங்கள் முழங்க 'தொழுவ மாடுகளுக்கு' முக்கனி மரியாதை - வைரலாகும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்!



உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் 'அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடுங்கள் முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சித்தார் பட்டி கிராமத்தில் பாரம்பரியம் மாறாமல் வினோதமாகவும்,கால்நடைகளை தெய்வமாக மதிக்கும் திருவிழாவாகும் மாட்டுப் பொங்கல் அன்று திருவிழாவை நடத்தி உள்ளனர்.கால்நடைகளை தெய்வமாக மதிக்கும் கிராமத்தின் சார்பில் தொழுவ மாடுகளுக்கும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தொழுவ மாடுகளுக்கு நெகிழ்ச்சியான முறையில் மரியாதை செலுத்தப்பட்டது. " 

கிராமத்தின் பெயர் காரணமும் முக்கிய தகவலும் 


தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை என்பது பல்வேறு பாரம்பரியமிக்க மலையாக கருதப்படும் இந்த மலைப் பகுதிகளில் எண்ணற்ற திருக்கோவில்கள்
அமைந்துள்ளன. இந்த திருக்கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எண்ணற்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இதேபோல் தான் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டி கிராமமும் அமைந்துள்ளது. வேலப்பர் திருக்கோவில் அமைந்த பகுதி தான் இந்த அழகிய கிராமம்.




 இந்த கிராமமானது பல வருடங்களுக்கு முன்பாக கண்டமநாயக்கனூர் ஜமீன் காலத்தில் வருசநாடு வனப்பகுதியில் பாலூத்து என்னும் கிராமத்தின் அருகே இருந்து உள்ளது. பாலூத்து கிராமத்தில்  சித்தார்பட்டி கிராமத்தின் முன்னோர்கள் வாழ்ந்து வந்ததாகவும், பின்பு கண்டமநாயக்கனூர் பகுதியிலிருந்து மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு செல்லும் பகுதியில் கிராம மக்கள் வாழ்ந்து வந்ததாகவும், அதனை தொடர்ந்து தற்பொழுது உள்ள சித்தார்பட்டி கிராம பகுதியில் முன்னோர்கள் வந்து வாழ்ந்ததாகவும் இந்த கிராமத்தின் முன்னோடியாக திகழ்கிறது .தம்பி நாயக்கர் என்பவரின் பெயரின் அடிப்படையில் தெலுங்கில் தமினி பெல்லி என்று இந்த கிராமத்தினை கூறி வந்த நிலையில் போடி அருகே தம்பிநாயக்கன்பட்டி என்ற கிராமமும் அமைந்துள்ளதால் அந்த கிராமத்துக்கு போக்குவரத்து சென்று விட்டதாகவும் இதனால் இந்த கிராமத்தின் பெயரை சித்தார்பட்டி என்றும் மாற்றியுள்ளதாக தெரிவித்தனர்


 போக்குவரத்துக்கு  வித்திட்ட சித்தார்பட்டி கிராமம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லை.மேலும் அந்த அந்த நேரத்தில் வாழ்ந்த முன்னோர்கள் மாட்டு வண்டி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.இந்த காலங்களுக்கு முன்பே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு
 முன்பு இந்த சித்தார்பட்டி கிராமத்திலிருந்து திண்டுக்கல் வரை பேருந்து இயக்கப்பட்டதாகவும் ,இந்த கிராமத்தின் பெரியவர்கள் கூறினார்கள்.




போக்குவரத்து வழித்தடம்


2026 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மேலும் இந்த கிராமத்தில் இருந்து மஞ்சி நாயக்கன்பட்டி ,ராஜதானி ,ஆண்டிபட்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக தேனிக்கு செல்லும் நகர பேருந்தும் ,ஜீ.உசிலம்பட்டி கண்டமனூர் பாலகிருஷ்ணாபுரம் கொடுவிலார்பட்டி அரண்மனைப்புதூர் வழியாக தேனிக்கு செல்லும் பேருந்துகளும் என இரு வழி தடங்கள் இந்த கிராமத்தில் உள்ளது. மேலும் கணேசபுரம் வழியாக கண்டமனூர் செல்லும் பாதையும் அமைந்து உள்ளது.
 


கோவில் நகரம் சித்தார்பட்டி

 குன்று இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர் .அதேபோல் இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் முத்தாலம்மன் -பகவதி அம்மன் ஆகிய திருக்கோவில் கம்பீரத்துடன் அனைவரையும் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது . வீர ஏர் ரம்மாள், பொம்மை சாமி திருக்கோவில் ,விநாயகர் திருக்கோவில் ,ராமர் திருக்கோவில் (பெருமாள்)மற்றும் பல்வேறு திருக்கோவில்கள் இந்த கிராமத்தில் உள்ளன.



இந்த கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் முக்கிய திருவிழாவாக ஒரு வருடம் பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழாவும் மற்றொரு வருடம் முத்தாலம்மன் திருக்கோவில் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பல்வேறு வேடங்களில் அணிவகுத்து வருகின்றனர் தேவராட்டங்கள் ஆடி தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.



நாட்டு மாடுகளை போற்றி நாட்டு மாடுகளை வளர்க்கும்  கிராமப் பகுதிகள்

இயற்கை வளங்களுக்கு இருப்பிடமாக திகழும் மழை பகுதிகளும் விவசாயத்திற்காகவும் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு மாடுகளும் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளது.
இந்த நாட்டு மாடுகள் எனப்படும் தொழுவ மாடுகள், சித்தார்பட்டி மஞ்சிநாயக்கன்பட்டி, பாலக்கோம்பை கரிசல்பட்டி ,கல்லுப்பட்டி ,குண்டல்நாயக்கன்பட்டி ,பொட்டிபுரம், சூலப்புரம் என பல்வேறு கிராமங்களில் இன்று வரை நாட்டு மாடுகள் எனப்படும் தொழுவ மாடுகள் இயற்கை வளங்கள் அழியாமல் இருப்பதற்காக இந்த பகுதி உள்ள மக்கள் வளர்த்து வருகின்றனர் .விவசாயம் நிலைத்திருக்கவும் நமக்கு இயற்கையான உணவுகள் கிடைத்திடவும் அடித்தளமாக விளங்கும் நாட்டு மாடுகளை இயற்கையின் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

 பொங்கல் திருநாள்



தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் .சூரிய பகவனை வணங்கி பொங்கல் வைத்து வணங்குகிறோம் .இந்த நிகழ்வில் உழவர்களை போற்றும் வகையிலும் உழவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளை வணங்குவதற்காகவும் மாட்டுப்பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல் சித்தார் பட்டி கிராமத்திலும் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் விதமாகவும் இயற்கை வளங்களை அழிக்காமல் மேலும் பேணிக்காக்கும் விதமாக இன்று வரை தொழுவ மாடுகளை தெய்வமாக வணங்கி மாட்டு பொங்கல் அன்று தொழுவ மாடுகளை அலங்கரித்து தொழுவம் முழுவதும் செங்கரும்புகள் ,மாவிலை தோரணங்கள் கட்டி ,அழகு பதுமையாக உருவாக்கி தொழுவ மாடுகளை தெய்வமாக வணங்கி பொங்கல் வைத்து முக்கனிகள் வைத்து அனைத்து மாடுகளுக்கும் மஞ்சள் தூவி பொங்கல் கரும்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து வணங்கிவரும் நிகழ்ச்சியும் இன்று வரை நடைபெற்று வருகிறது.
முதல் நாள் திருவிழாவில் சூரிய பகவனை வணங்கி பொங்கல் வைத்து கொண்டாடும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.



இரண்டாம் நாள் நிகழ்வாக மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பொங்கல் வைத்து, முக்கனிகள், செங்கரும்புகள் படைக்கும் வணங்குதல் சிறப்பித்து வருகின்றனர்
இந்த மாட்டுப் பொங்கல் திருநாள் அன்று அனைத்து மாடுகளுக்கும் முக்கனிகள் வைத்து கலர் கலராக அலங்கரித்து , தொழுவத்தை திறந்தவுடன் அனைத்து மாடுகளும் குதுகுளத்தை வெளிப்படுத்தும் விதமாக வரிசையாக மேய்ச்சலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது அக்கிராமத்தின் அனைத்து பொதுமக்களும் வரிசையாக நின்று வணங்கி மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.


மந்திரங்கள் தந்திரங்கள் கூறும் பெரியவர்கள் :
இந்தத் தொழுவத்தில் இருக்கும் பொழுது பிறக்கும் கன்று குட்டிகள் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு அந்தத் தொழுவத்தில் வெளிப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் நாட்கள் வரும் பொழுது அந்த கன்று குட்டிகளுக்கு வெளி பகுதியில் நன்றாக மேய்ச்சலுக்கு, சென்று பூச்சிகள் கடிக்காமல் இருப்பதற்கு ,அனைத்து மாடுகளை போல் இந்த கன்றுக் குட்டிகளும் நன்றாக மேய்ச்சல் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் நன்றாக வீடு திரும்ப வேண்டும் என்று கூறி பல்வேறு மந்திரங்கள் அந்த கன்று குட்டிகளுக்கு இந்த கிராமத்தின் பெரியவர்கள் கூறி வருகின்றனர்.




பூஜைகளுடன் தொடங்கும் மாட்டு பொங்கல்



மாட்டுத் தொழுவத்தில் பல்வேறு பூஜைகள் முடிந்தவுடன் தொழுவ மாடுகள் தொழுவத்தை திறந்தவுடன் வரிசையாக அணிவகுத்து செல்லும் பொழுது அக்கிராமத்து சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வரிசையாக நின்று ஆரவாரத்துடன் அந்த தொழுவுமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்தனர். வைத்தனர். விடுகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் முதல் நாள் மிக சிறப்பான முறையில் இருக்கும் ஆனால் இந்த கிராமத்தில் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டு பொங்கல் அன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு குதுகுளத்துடன் இந்த கிராம மக்கள் செயல்படுத்தி வருகின்றனர்


பழமை மாறாமல் இருக்கும் கிராமம்

இந்த தொழுவ மாடுகள் தொழுவ பகுதியில் வெளியில் வரும் பொழுது உருமி மேளம் முழங்க பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான சேலைகளை அணிந்து இளைஞர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சட்டைகள் அணிந்தும் சந்தோஷம் பொங்க அந்த நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு காண்போரை இன்று வரை குதூகலத்தை ஏற்படுத்தி. கவர்ந்தது. வருகிறது.மேலும் இந்த கிராமத்தின் தகவலை அறிந்த பல்வேறு பொதுமக்கள் மாட்டு பொங்கல் என்று வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து சித்தார்பட்டி கிராம மக்களை பாராட்டினார்






இந்த கிராமத்தைப் பற்றியும்உங்கள் கிராமத்தைப் பற்றியும் தகவல் தெரிந்தால்

thenidigital2026@gmail.com  என்ற மெய்ல் ஐடிக்கு அனுப்பவும்



கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.