Type Here to Get Search Results !

விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பாரத் விஸ்தார் (Bharat Vistaar) திட்டம்: இனி போன் செய்தாலே போதும்!

1

 விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பாரத் விஸ்தார் (Bharat Vistaar) திட்டம்: இனி போன் செய்தாலே போதும்!

பாரத் விஸ்தார் திட்டத் தகவல்"பாரத் விஸ்தார் (Bharat Vistaar) AI செயலி: விவசாயிகள் 155261 எண்ணிற்கு அழைத்து பயன் பெறுவது எப்படி?" 

மத்திய மாநில அரசு சார்பில் விவசாயம் கல்வி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

மேலும் விவசாயிகளுக்கும் விவசாய விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் மத்திய  மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல் படுத்தி வரும் நிலையில் விவசாய இடுப்பொருட்கள் வாங்குவதற்கும் மானிய விலையில் அரசு சார்பில் பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் மத்திய அரசு சார்பில் PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருடத்திற்கு ரூபாய் 6000 விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கி வருகிறது

 "பாரத் விஸ்தார் மூலம் விவசாயிகளுக்கு உள்ள பயன்கள்" 

விவசாய மானியங்கள் மற்றும் விவசாயம் சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விவசாயிகள் வேளாண்மை அலுவலகம் மற்றும் துறை சார்ந்த அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வந்து கொண்டு இருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் புதிய செயல்பாடு ஒன்று தற்பொழுது செயல்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 6000 பல்வேறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் சில விவசாயிகளுக்கு திடீரென நின்று விட்டது மேலும் புதிய விவசாயிகள் சேர்வதற்கும் விண்ணப்பம் அளித்து வரும் நிலையில் புதிய விவசாயிகள் எவ்வாறு விண்ணப்பம் அளிப்பது என்பது குறித்தும், விண்ணப்பத்தின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை குறித்தும் எதற்காக இந்தத் திட்டத்தில் விவசாயிகள் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் இன்னும் பல தகவல்கள் அறிவதற்கு விவசாயிகள் வேளாண் அலுவலரை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறிந்து வந்துள்ளனர் .


இந்த நிலையை போக்கிட மத்திய அரசு சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் Bharat ViSTAAR என்னும் செயலினை அறிமுகப்படுத்தி செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளது.மேலும் இந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயலியானது ஏ ஐ தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது

பாராத் விஸ்தார் Bharat vistaar என்ற Ai தொழில்நுட்பத்தை மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஜெய்ப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த Ai தொழில்நுட்பமானது விவசாயிகள் குறிப்பாக pm கிசான் திட்டத்தில் உள்ள பயனாளிகள் , மற்ற விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த Ai தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுகிறது என்பதனை விரிவான முறையில் இந்த கட்டுரையில் காண்போம்

Bharat Vistaar AI Digital Agriculture Advisor interface illustration


பாரத் விஸ்தார் மூலம் விவசாயிகளுக்கு உள்ள பயன்கள்


பி எம் கிசான் திட்டத்தில் உள்ள பயனாளிகள் மற்றும் விவசாயிகள்பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஏ ஐ தொழில்நுட்பமானது  இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் தவணைத் தொகை மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என்றும், இந்த தவணைத் தொகை எப்பொது வரும் என்பது குறித்தும் இந்த Ai தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்


பி எம் கிசான் திட்டத்தில் நிதி உதவி பெறுவதற்கு ஏதாவது சிக்கல் இருந்தாலும் இந்த Ai தொழில்நுட்பத்தின் மூலம் புகார் அளிக்கலாம்.மேலும் நாம் கொடுத்த புகார் எந்த அளவு உள்ளது என்ற நிலையையும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்த தளமானதுவெறும் தகவல் மையம் மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்கு பயம்பெரும் வகையில் டிஜிட்டல் வேளாண் ஆலோசகர் என்ற அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தி வருகிறது.

இந்த செயலியில் பாரதி என்ற Ai பேசும் உதவியாளர் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த Ai செயலியானது எளிமையான மொழியில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது .விரைவில் தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியினை பயன்படுத்தாமல் சாதாரண மொபைல்களிலும் புகார் அளிக்கலாம்.

சாதாரண பட்டன் போன் வைத்திருக்கும் விவசாயிகள் 155261 என்ற எண்ணுக்கு அழைத்து தங்கள் குறைகளை கூறலாம் என்றும் ,தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வானிலை ஆய்வு மையத்துடன் இந்த செயலியை இணைக்கப்பட்டுள்ளதால் வானிலை ,காலநிலை இயற்கை சீற்றங்கள் குறித்து தகவல்களை முன்கூட்டியே இதன் மூலம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட நடக்கும் சந்தை விலைகள் பற்றியும் இதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால்விவசாயிகள் விலை பொருட்களை லாபமாக விற்பனை செய்வதற்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.


ஒரு விவசாயியின் நிலத்தில் உள்ள மண்ணின் உரம் எந்த அளவு உள்ளது என்பதை பற்றியும் அந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்தால் நன்றாக வளர்ச்சியை அடையும் என்பதை பற்றியும் இந்த Ai மூலமாக விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

Kisan and Bharat Vistaar scheme benefits infographic


பிஎம் கிசான் திட்டத்தினை தவிர, பிஎம் பயிர் காப்பீட்டுத் திட்டம், கிசான் கிரெடிட் கார்டு, வேளாண் உள்கட்டமைப்பு நிதி, நுண்ணீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்கள் ,விவசாயிகளுக்கு தேவையான முக்கியத் திட்டங்களின் தகவல்களும்,இதில் உடனுக்குடன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Bharat Vistaar திட்டத்தினை எவ்வாறு விவசாயிகள் பயன்படுத்துவது


1.முதலில் உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள  ப்ளே ஸ்டோருக்கு செல்ல வேண்டும்

2.அதில் Bharat Vistaar என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

3.Bharat Vistaar செயலியினை டவுன் லோடு செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும்

4, Chatbot மற்றும் voice Assistant மூலம் பேசி பதிவு செய்யலாம்

நீங்கள் விவசாயம் குறித்து எந்த தகவல்களை கேட்கிறீர்களோ அந்த தகவல்களுக்கு  திரையில் பதிலாக வரும்.

PM கிசான் மற்றும் PM FBy செயலிகள்,பயன்படுத்தி வரும் நபர்கள் Bharat vistaar Ai தொழில்நுட்பம் அந்தப் பகுதியிலேயே இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளவும்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. விவசாயிகளுக்கு தேவையான பதிவு... மேலும் இதே போல சேவைகளை தொடரவும்

    பதிலளிநீக்கு