Type Here to Get Search Results !

கடமலை மயிலாடும்பாறை: ‘பாராகூட் கல்பவிருஷா’ முன்னெடுப்பில் சாந்தநேரி கண்மாய் தூர்வாரும் பணி தொடக்கம் - விவசாயிகள் நெகிழ்ச்சி!

0

கடமலை மயிலாடும்பாறை: ‘பாராகூட் கல்பவிருஷா’ முன்னெடுப்பில் சாந்தநேரி கண்மாய் தூர்வாரும் பணி தொடக்கம் - விவசாயிகள் நெகிழ்ச்சி!
"Santhaneri Kanmai Desilting Work Theni"

​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கடமலை மயிலை ஒன்றியத்தில் மந்திச்சுனை அருகே மூலக்கடை பகுதியில் சாந்தநேரி கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் மந்திச்சுனை, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. ஆனால், தற்பொழுது இந்தக் கண்மாய் முழுவதும் முட்புதர்களால் அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டு, மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு இடம் இல்லாமல் தண்ணீர் அனைத்தும் வீணாகி சாலைகளிலும் பல்வேறு இடங்களிலும் சென்றது. இதனால் கண்மாய் பயனில்லாமல் போனதுடன், இப்பகுதியில் கடும் வறட்சியும் ஏற்பட்டது.


​இதனை அறிந்த பாராகூட் கல்பவிருஷா நிறுவனம், பல ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ள சாந்தநேரி கண்மாயைத் தூர்வார வேண்டும் என்ற நோக்கத்தில், கடமலை மயிலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்றது. அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மழைநீரைப் பெருமளவில் தேக்கி வைக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது:

"Santhaneri Kanmai Desilting Work Theni"


"பல வருடங்களாக இந்தக் கண்மாய் பகுதி முழுவதும் முட்புதர்கள் சூழப்பட்டு, நீரைத் தேக்கி வைக்க முடியாமல் இருந்ததால் பல ஏக்கர் நிலங்கள் வறட்சியாகக் காணப்பட்டன. இந்த நீரைச் சேமிக்க கண்மாயைத் தூர்வார வேண்டும் என்று பலமுறை விவசாயிகள் கேட்டுக்கொண்டும் பணிகள் நடைபெறாமல் இருந்தன. தற்பொழுது பாராகூட் கல்பவிருஷா நிறுவனத்தின் சார்பில் இந்தச் சாந்தநேரி கண்மாய் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தப் பணிகளுக்கு விவசாயிகள் சார்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்" என்று கூறி அந்நிறுவனத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

பாராகூட் கல்பவிருஷா நிறுவனத்தினர் கூறும்போது:

"தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர் ஆதாரம் இன்றித் தவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் மழைநீரைச் சேமிக்க முடியாமல் தண்ணீர் வீணாகி வருகிறது. கண்மாய்கள் பல ஏக்கர் நிலப்பரப்பில் இருந்தாலும்கூட, அவை முட்புதர்கள் சூழப்பட்டு நீரைத் தேக்கி வைக்க இடமில்லாமல் காணப்படுகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு கண்மாய்களை எங்கள் நிறுவனத்தின் சார்பில் தூர்வாரி விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த விவசாயப் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, தேனி மாவட்டத்தில் சாந்தநேரி கண்மாயைத் தூர்வாரும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்" என்று தெரிவித்தனர்.


பாராகூட் கல்பவிருஷா நிறுவனத்தினர் சார்பில் தேவாரம் பகுதியில் விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு தேவாரம் கண்மாய் தூர் வரும் பணியில் ஈடுபட்டதனால் தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் சான்றிதழ் மற்றும் விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்


🎓 கல்வி: "தேனியில் உயர்கல்வி இலக்கியா? 🏆 சிறந்த கல்லூரிகள் மற்றும் உதவித்தொகை விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்! 📝"






💼 வேலைவாய்ப்பு: "வேலை தேடுகிறீர்களா? 🤝 தேனி மாவட்டத்தின் அனைத்து தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை ஒரே இடத்தில் பெறுங்கள்! 👔🚀"




🏢 தொழில்: "தொழில் முனைவோரா? 💰 அரசு மானியத்துடன் தொழில் தொடங்கும் https://www.google.com/search?q=TheniGuide.com! 📈💡"




🆓 விளம்பரம்: "உங்கள் கடை தேனியில் உள்ளதா? 🏪 https://www.google.com/search?q=TheniGuide.com-ல் இலவசமாகப் பதிவு செய்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துங்கள்! 📢✨"




TheniGuide.com





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.