அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஓவிய ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026: தகுதியானவர்கள் ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய விரும்பும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற டி.வி.டி மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர ஓவிய ஆசிரியர் (Drawing Teacher) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்குத் தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியுடைய ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்
வேலை வழங்கும்
பள்ளியின் பெயர்
டி.வி.டி மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி)
பள்ளி அமைந்து உள்ள அமைவிடம்
கோட்டார், நாகர்கோவில் - 629002 (கன்னியாகுமரி மாவட்டம்)
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம் (Permanent Govt Aided Post)
பணியிடம்
ஓவிய ஆசிரியர் (Drawing Teacher)
இனவாரி சுழற்சி
பொதுப் பிரிவு (Open Competition - OC) - அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி 06.06.2026
கல்வித்தகுதி இதர விவரங்கள்:
கல்வித்தகுதி:
12-ஆம் வகுப்பு தேர்ச்சி (+2 Pass), Free-Hand Outline and Model Drawing சான்றிதழுடன் T.T.C (Technical Teacher Certificate) முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு & சம்பளம்:
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.
அங்கீகாரம்:
கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (மூ.மு.எண். 1132/அ4/2026, நாள்: 15.05.2026) படி இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
தகுதியும் விருப்பமும் உள்ள ஆசிரியர்கள், தங்களது முழுமையான சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பக் கடிதம் (Application Letter) மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களை (Xerox copies) இணைத்து கீழே குறிப்பிட்டுள்ள பள்ளி முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
டி.வி.டி மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி,
கோட்டார், நாகர்கோவில் - 629002.
முக்கியக் குறிப்பு:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் அனைத்தும் வரும் 06.06.2026 ஆம் தேதிக்குள் பள்ளி நிர்வாகத்திற்குச் சென்று சேருமாறு அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

