Type Here to Get Search Results !

தேனி கடமலைக்குண்டுவில் மாபெரும் இரத்த தான முகாம்: 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு! ​

0

 தேனி கடமலைக்குண்டுவில் மாபெரும் இரத்த தான முகாம்: 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு!

தேனி கடமலைக்குண்டு இரத்த தான முகாம் 2026.

"தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கடமலைக்குண்டு விவேகானந்தா மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தியில் ஆர்வத்துடன் ஏராளமனோர் பங்கேற்பு"


கடமலைக்குண்டு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடலைக்குண்டு வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கடமலைக்குண்டு விவேகானந்தா மருத்துவமனை ஆகியவை இணைந்து  மாபெரும் இரத்த தான முகாம் கடமலை  விவேகானந்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.


தொடக்க விழா 


இரத்த தான  முகாமிற்கு வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் V. சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தென் மண்டல செயலாளர் M.C.M. முத்துராமலிங்கம் MA., BL., முன்னிலை வகித்தார். தேனி  R. ராமராஜ், இந்து முன்னணி ஆச்சி. கார்த்திக், கோம்பை இளம்பரிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்து இரத்த தானம் வழங்குவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

தேனி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த இரத்த தான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்."

​"கடமலைக்குண்டு பகுதியில் இத்தகைய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது."

​"தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்."



பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் :

கடமலை குறிஞ்சி வளர்ச்சி குழு நண்பர்கள், சேவா பாரதி (சின்னமனூர்) ஆனந்த்,  முத்துக்குமார், இந்து முன்னணி நிர்வாகிகள் முருகன், உமையராஜன் மற்றும்  பலர் இந்த இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இம்முகாமில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் ஏராளமானோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர் . இந்த முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம்  வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.



பிற ​மருத்துவச் சேவைகள்:

இரத்த தான முகாம் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் விவேகானந்தா மருத்துவமனை -SBO and DSM Yoku Health Care Chennai சார்பில் இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் இரத்த முகாமும் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற  அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரத்தான முகாம் முழு உடல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஏற்பாடுகளை  விவேகானந்தா மருத்துவமனை நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.


மேலும் மருத்துவமனை குறித்து விபரங்கள் அறிய

097862 77897

மருத்துவமனைக்கு சென்றடைய

https://maps.app.goo.gl/8xdqxGtVJnEvPbCa6

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.