Type Here to Get Search Results !

தேனி அருகே பூதிப்புரம் கலைமகள் பள்ளி ஆண்டு விழா: மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களை கவர்ந்தன!

0

 தேனி அருகே பூதிப்புரம் கலைமகள் பள்ளி ஆண்டு விழா: மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களை கவர்ந்தன! 

பூதிப்புரம் கலைமகள் பள்ளி 38-வது ஆண்டு விழா தலைமை உரை அண்ணாமலை

"​தேனிபூதிப்புரத்தில் உள்ள கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 38-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா  நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. "


பள்ளி ஆண்டு​விழா தலைமை மற்றும் வரவேற்புரை:



கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா வரவேற்புரை ராகுல்ஜி


​தேனி மாவட்டம் பூதிப்புரத்தில்  கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 38-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக  நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவிற்கு பள்ளிக் குழுத்தலைவர்  க.அண்ணாமலை தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் கு.ராகுல்ஜி பங்கேற்று  அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்., பள்ளியின் துணை முதல்வர் செ.கௌசல்யா, கடந்த கல்வி ஆண்டில் ஓராண்டில் பள்ளி அடைந்த கல்வி மற்றும் விளையாட்டுச் சாதனைகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்து சிறப்புரையாற்றினார்.

மாணவர்களின் தனித்திறன் மற்றும் கலைநிகழ்ச்சிகள்

​விழாவின் முக்கிய நிகழ்வாக  மாணவ-மாணவியரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன:

​வண்ணமயமான நடனங்கள்: பாரம்பரிய மற்றும் சமகாலப் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடிய நடனம் ஆடியாதால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



பல்வேறு நிகழ்வுகள்


மழலை குழந்தைகள் பங்கேற்று திருக்குறள் ஒப்புவித்தல்,மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திருக்குறளைத் தங்குதடையின்றி ஒப்புவித்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினார்கள்.


தேனி பூதிப்புரம் பள்ளி ஆண்டு விழா மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள்


பேச்சுப் போட்டிகள்: 


தேசத் தலைவர்களின் தியாகங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த தலைப்புகளில் மாணவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றியது அனைவரின் பாராட்டையும் பெற்றது.



தேனி பூதிப்புரம் பள்ளி ஆண்டு விழா மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள்



பரிசளிப்பு விழா :

பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற

​விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குச் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்


​ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை முருக செல்வி)

​மின்சார வாரிய முன்னாள் இளநிலை பொறியாளர் அ.வீராச்சாமி

​ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார்கள்.

பங்கேற்பாளர்கள் :


மழலையர் பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பூதிப்புரம்

கலைமகள் பள்ளி ஆண்டு விழா மேடையில் ஆசிரியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்

பள்ளி ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு


​இந்த விழாவில் பள்ளி ஆசிரியைகள் கார்த்தீஸ்வரி, கலையரசி, பிரீத்திகா பள்ளியின் அலுவலர்கள் பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பூதிப்புரம் கிராம முக்கிய பிரமுகர்கள் என திரளாகக் கலந்துகொண்டனர். அதேபோல் சமுதாய பெரியோர்கள், பட்டிமன்ற நடுவர் கவி கருப்பையா, கார்மேகம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்து மாணவர்கள் கல்வி விளையாட்டு  போட்டிகளுக்கு எவ்வாறு வெற்றி அடைய வேண்டும் என்பதை குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

​விழாவின் நிறைவாக, பள்ளி முதல்வர் ரா.குருவிஜய் நன்றியுரை ஆற்றினார். இந்த பண்டிகை ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை திறனை பார்த்து பூதிப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு விழா பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



பள்ளியின் சிறப்பு

கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியானது தேனியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேலும் பூதிப்புரம் நகர் பகுதியில் அமைந்துள்ளதால் பாதுகாப்பான பள்ளி வசதியும் காற்றோட்டமான பள்ளியாகவும் திகழ்கிறது மேலும் இங்கு ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு கற்பித்தல் இருப்பதினால் மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கும் விதமாக அமைகிறது .அதேபோல் விளையாட்டு சிலம்பம் பல்வேறு கிராமிய கலைகள் கற்பித்து வரும் நிலையில் மாணவர்களின் செயல் திறன் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது

பள்ளியின் அமைவிடம்


https://maps.app.goo.gl/pauU5T1cgnCuZU4j7?g_st=ac

பள்ளியில் அட்மிஷன் உட்பட அனைத்து தகவல்களுக்கும்

மேலும் விபரங்களுக்கு

098947 41198


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.