PM உஜ்வாலா யோஜனா: இலவச கேஸ் இணைப்பு பெறுவது எப்படி?
மத்திய மாநில அரசு சார்பில் விவசாயிகள், மாணவர்கள் ,பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது வருகிறது,.இதே போல் மகளிர் பயன் பெரும் கையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மக்களிருக்க அரசு திட்டங்களில் பயன்பெற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி இலவசமாகவும் மானியமும் வழங்கப்படுகிறது.அந்த வகையில் மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சிலிண்டர் வாங்குவது எப்படி அதற்குரிய தகுதிகள் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம்
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்
2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பள்ளியா என்ற பகுதியில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் (சுமார் 80 மில்லியன்)தூய்மையான சமையல் எரிவாயு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அடிப்படையில் தொடங்கப்பட்டது.10 கோடிக்கு மேல் மகளிருக்கு சிலிண்டர்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தத் திட்டத்தில் மகளிர் சேர்வதால் உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
பெண்களுக்கு மட்டும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புகையில்லாத சமையல் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஏராளமான மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.
யார் யாருக்கு முன்னுரிமை
எஸ் சி ,எஸ் டி ,எம் பி சி வகுப்பைச் சேர்ந்த நபர்கள்
தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்கள்
ஏழைகள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட ( AAY )உணவு திட்ட பயனாளிகள்
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகள்,
தீவுகள் ஆற்றுத்தீவுகளில் வசிப்பவர்கள்,
சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு பட்டியலை சேர்ந்த குடும்பங்கள் (SECC)
ஆகியவற்றில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.மேலும் விபரங்களை அதிகாரபூர்வமான இணையதளத்துக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
தகுதிகள்
மேலே வழங்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கீழே உள்ள எந்த வசதியும் அவர்களிடம் இருக்கக் கூடாது
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது
மோட்டார் பொருத்தப்பட்ட மீன் பிடி படகு வைத்திருக்கக் கூடாது
இயந்திரம் மயமாக்கப்பட்ட விவசாய உபகரணங்கள் வைத்திருக்கக் கூடாது
விண்ணப்பம் அளிக்க விரும்பும் பெண்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசாங்க வேலைகளில் இருக்கக் கூடாது அதே மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
கிசான் கடன் அட்டையில் வரம்பு ரூ 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது
வருமானம் அல்லது தொழில் முறை வரி செலுத்தும் நபராக இருக்கக் கூடாது
மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கும் படி காங்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது
குளிர்சாதனப்பெட்டி லேண்ட்லைன் தொலைபேசி வசதி போன்றவை வைத்திருக்கக் கூடாது
இரண்டரை ஏக்கருக்கு மேல் பாசன நிலத்துடன் ஒரு பாசன இயந்திரம்
7.5 ஏக்கருக்கு மேல் ஒரு பாசன இயந்திரத்துடன் நிலம், 5ஏக்கர் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கும் நபர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பம் அளிப்பது எப்படி
முதலில் அதிகாரப்பூர்வமான இணையதளம்
https://www.myscheme.gov.in/schemes/pmuy
என்ற இணையதள முகவரிக்கு சென்று லாகின் செய்து கொள்ளவும்.
புதிய உஜ்வாலா இணைப்புக்கு விண்ணப்பிக்கவும்
என்ற பகுதிக்கு செல்லவும்
உங்களுடைய கேஸ் நிறுவனம் எது என்பதனை தெரியப்படுத்தவும் (உதாரணமாக hp இன்டேன் பாரத். )
ஆதார் கார்டு மொபைல் எண்ணை பதிவு செய்து OTP பெறவும்
குடும்பத் தலைவியின் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரைப் பதிவு செய்யவும்
. தேவையான ஆவணங்களை இணைக்கவும்
இந்த விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பங்கள் சரியாக இருந்தால் நீங்கள் கூறிய கேஸ் ஏஜென்சி ஆய்வு செய்து இலவசமாக சிலிண்டர் வழங்க வேண்டும் ஏற்படும் செய்து தருவார்கள்
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பது எப்படி
சம்பந்தப்பட்ட உங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்குச் சென்று கேஒய்சி படிவங்களை நிரப்பி சம்பந்தப்பட்ட உங்களின் சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பம் அளிப்பதற்கு உரிய ஆவணங்கள்
kyc விண்ணப்ப படிவம்
விண்ணப்பம் அளிப்பவரின் ஆதார் நகல்,
(18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்)
BPL ரேஷன்அட்டை அல்லது ஏழ்மை என்பதற்கான சான்று,
வங்கி கணக்கு புத்தகம் மற்ற விவரங்கள்,
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்,
ஜாதி சான்று (முன்னுரிமை அடிப்படையில் இருந்தால்)
கூடுதல் விபரங்களுக்கு உங்கள் கிராமத்தின் அருகில் உள்ள கேஸ் ஏஜென்சியை தொடர்புகொண்டு விரிவான விளக்கங்களைப் பெற விண்ணப்பம் அளிக்கப்பட்டது பயன்பெறலாம்
விண்ணப்பம் அளித்த நபர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை (ஸ்டேட்டஸ் ) எப்படி உள்ளது என்பதை எப்படி பார்ப்பது
பிரதம மந்திரி உஜ்வாலா
யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்த நபர்களுக்கு விண்ணப்பம் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
அதிகாரப்பூர்வமான இணையதளம்
https://www.pmuy.gov.in/ www.pmuy.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அல்லது )
எந்த இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தின் நிலை எந்த பகுதிக்கு சென்று ஆதார் எண் அல்லது விண்ணப்பத்தின் எண் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளுங்கள் கொள்ளலாம்
அல்லது
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா அதிகாரப்பூர்வமான மொபைல் (APP)ஆப்பினை டவுன்லோடு செய்து அதில் லாகின் செய்து விண்ணப்பத்தின் எண் அல்லது ஆதார் எண் உள்ளீடு செய்து தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்
அல்லது
உங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய விரிவான தகவலையும் விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்
🎓 கல்வி: "தேனியில் உயர்கல்வி இலக்கியா? 🏆 சிறந்த கல்லூரிகள் மற்றும் உதவித்தொகை விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்! 📝"
💼 வேலைவாய்ப்பு: "வேலை தேடுகிறீர்களா? 🤝 தேனி மாவட்டத்தின் அனைத்து தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை ஒரே இடத்தில் பெறுங்கள்! 👔🚀"
🏢 தொழில்: "தொழில் முனைவோரா? 💰 அரசு மானியத்துடன் தொழில் தொடங்கும் https://www.google.com/search?q=TheniGuide.com! 📈💡"
🆓 விளம்பரம்: "உங்கள் கடை தேனியில் உள்ளதா? 🏪 https://www.google.com/search?q=TheniGuide.com-ல் இலவசமாகப் பதிவு செய்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துங்கள்! 📢✨"

