பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஜூன் 4 முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம்: அமைச்சர் அறிவிப்பு!
Type Here to Get Search Results !

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஜூன் 4 முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம்: அமைச்சர் அறிவிப்பு!

0

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஜூன் 4 முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம்: அமைச்சர் அறிவிப்பு! 


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026 - 2027) பள்ளிகள் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வர ஏதுவாக, அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான மிக முக்கிய அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளி மாணவ/ மாணவிகள் தங்களது பள்ளிச் சீருடையுடன் (School Uniform) இருந்தால் மட்டும் போதும்.

​அவர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்று வர அரசு பேருந்துகளில் (Government Buses) கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து கட்டணச் சலுகை அட்டை (Bus Pass) வழங்கப்படும் வரை, மாணவர்கள் சீருடையை காண்பித்து இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களைப் போல, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இந்த இலவச பயணச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி:



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் (Govt Arts and Science College)

அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் (Govt Polytechnic College)

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் (Govt ITI Students

ஆகியோர் தங்களது கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட நடப்பு கல்வி ஆண்டிற்கான அடையாள அட்டையை (ID Card) நடத்துநரிடம் (Conductor) காண்பித்து கட்டணமின்றி முற்றிலும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

​முக்கிய குறிப்பு: மாணவர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி எவ்வித தடையுமின்றி தங்களது கல்வியைத் தொடர வேண்டும் என்றும், பேருந்துகளில் பயணிக்கும் போது பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.